Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல வெற்றி திரையரங்கில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், படத்தை காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரையரங்கில் குவிந்துள்ளனர்.
திரையரங்க வளாகத்தில் போதிய வாகன நிறுத்துமிட வசதி இல்லாததால், வந்திருந்த பலரும் தங்களது இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை ஜி.எஸ்.டி சாலையோரத்திலேயே ஆங்காங்கே நிறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக சாலையின் ஒரு பகுதி முற்றிலுமாக அடைக்கப்பட்டு, போக்குவரத்து ஸ்தம்பித்தது. குறிப்பாக குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் மற்றும் பல்லாவரம் நோக்கி செல்லும் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இது அலுவலக நேரம் என்பதால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் செல்வோர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களும் நெரிசலில் சிக்கி தவித்தன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b