Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இன்று அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், நீட் தேர்வுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடும் மாணவர்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது கைது உள்ளிட்ட எந்தவித அடக்குமுறை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b