Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 23 ஜூலை (ஹி.ச.)
தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கத்தின் சார்பில் இன்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டது.
அந்த மனுவில்,புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கக்கோரி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதாவது, புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு பிடிக்கப்படும் சந்தா தொகையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட காவலர் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜித் சிங்கை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஓய்வு பெற்ற காவலர் நல சங்கத்தின் கோரிக்கைகளை அரசிற்க்கு அனுப்பி வைப்பதாக அவர் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN