Enter your Email Address to subscribe to our newsletters

தேனி, 23 ஜூலை (ஹி.ச.)
தேனி மாவட்டம் சின்னமனூரில் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகியிருந்த திரையரங்கிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா சென்றபோது, தேனி தெற்கு மாவட்டச் செயலாளர் லெப்ட் பாண்டி ஆதரவாளர்களுக்கும், எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் 6 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பயன்படுத்திய காரின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam