திருப்பூரில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
திருப்பூர், 23 ஜூலை (ஹி.ச.) திருப்பூர் மாவட்டத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வர
Death


திருப்பூர், 23 ஜூலை (ஹி.ச.)

திருப்பூர் மாவட்டத்தில் பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சனி (26), திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணியாற்றி வந்தார். அவர் திருப்பூர் நல்லூர் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் இன்று காலை நடைபெற்ற அணிவகுப்பில் ரஞ்சனி கலந்து கொண்டார்.

பின்னர் தனது குடியிருப்பிற்கு திரும்பிய அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், பணிச்சுமை, தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், குடும்பத்தினர் மற்றும் சக காவலர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணியில் இருந்த இளம் பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்களிடையிலும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN