Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 23 ஜூலை (ஹி.ச.)
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த 68 வயதான தமிழ்க்கொடி, வீட்டில் தவறி விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், பொது வார்டில் சிகிச்சையில் இருந்த அவரை நேற்று நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த எலிகள், கட்டுப் போடப்பட்டிருந்த காயம் பகுதியில் மற்றும் கால் விரல்களில் கடித்துக் குதறியதாக கூறப்படுகிறது.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், எலி கடித்தது அவருக்கு உடனடியாக தெரியவில்லை. அருகில் இருந்த நோயாளிகள் தெரிவித்த பிறகே சம்பவம் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்க்கொடியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் எலி தொல்லையால் நோயாளி பாதிக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam