தூத்துக்குடி காவல் மரணம் குறித்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் – கனிமொழி வலியுறுத்தல்
தூத்துக்குடி, 23 ஜூலை (ஹி.ச.) நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் வேதனையளிப்பதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார். இத
கனிமொழி


தூத்துக்குடி, 23 ஜூலை (ஹி.ச.)

நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்திரவதையால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியாகியுள்ள தகவல் வேதனையளிப்பதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,

காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட பல அமைச்சர்களும் அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டு, இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக இருப்பதாக விமர்சித்தார்.

மேலும், நாளை பணிக்குத் திரும்பிய பிறகாவது தூத்துக்குடி காவல் மரணம் தொடர்பாக முதலமைச்சரும் அரசும் விளக்கம் அளிக்கிறார்களா என்பதைப் பார்ப்போம் என்றும் கனிமொழி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இளைஞரின் உடலை பெற மறுத்து உறவினர்களும் பொதுமக்களும் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், கனிமொழியின் இந்த பதிவு அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam