Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 23 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அருணாச்சலம், சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 17ஆம் தேதி தென்பாகம் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் தலையிலும் காலிலும் காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அருணாச்சலம் போலீசார் தாக்கியதால்தான் காயமடைந்து உயிரிழந்ததாக அவரது தாயார் பரமேஸ்வரி மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீதி கிடைக்கும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் தெரிவித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சுனில் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam