காவல் மரணங்களுக்கு அரசு மவுனமே காரணம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை, 23 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கண்டனம் தெரிவித்த
Udhayanidhi Stalin


Jj


சென்னை, 23 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவில்,

தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்திருப்பது வேதனை அளிக்கிறது.

போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல் மரணங்கள் நடைபெறும் போதெல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என அரசை விமர்சித்துள்ளார்.

அத்துடன், மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாச்சலத்தின் குடும்பத்திற்கு, திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்த பதிவு, தூத்துக்குடி காவல் மரணச் சம்பவம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ