பெண்ணை கட்டிப்போட்டு 21.7 சவரன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
விருதுநகர், 23 ஜூலை (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி அன்னலட்சுமி (53) கடந்த ஜூலை 15ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, இருவர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் நு
பெண்ணை கட்டிப்போட்டு 21.7 சவரன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி உட்பட 3 பேர் கைது


விருதுநகர், 23 ஜூலை (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே பணிக்கனேந்தல் பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி அன்னலட்சுமி (53) கடந்த ஜூலை 15ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, இருவர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் அன்னலட்சுமியின் கைகளைக் கட்டி, வாயில் பிளாஸ்டர் ஒட்டிவிட்டு, அவர் அணிந்திருந்த 21 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினரின் தீவிர விசாரணையில், சத்திரப்புளியங்குளத்தைச் சேர்ந்த அலங்காரகுமார் (43) மற்றும் சிவகாசியைச் சேர்ந்த அருண் (21) ஆகிய இருவர் இக்கொள்ளையில் நேரடியாக ஈடுபட்டது தெரியவந்தது. (இதில் அலங்காரகுமார் 2017 கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் ஆவார்). இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் சரவண குமார் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் த.வெ.க நிர்வாகி உட்பட மூன்று பேரிடமும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மருது சேனை அமைப்பின் நிர்வாகி சரவணன் என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b