Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 24 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், வழிப்பாட்டிற்கு சிறப்புமிக்க நாளான இன்று (ஜூலை 24) ஆடி வெள்ளியையொட்டி திரளான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவதற்காக வருகை புரிந்தனர்.
இதற்காக, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயில் முன் மண்டபத்தில் நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு அலகு குத்தி, பால்குடம் எடுத்து, அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதில், கோயிலுக்கு வருகை புரிந்த பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில், தண்ணீர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பிரகாஷ், கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.
பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோவில் நிர்வாகம் குடிநீர், தரிசன வரிசை, மருத்துவ உதவி உள்ளிட்ட சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.
பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை உறுதி செய்ய போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசம் நிறைந்திருந்தது.
Hindusthan Samachar / ANANDHAN