Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 ஜூலை (ஹி.ச.)
அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) சாகசங்கள் நிறைந்த வரலாற்றுப் புதினங்களுக்காக உலகளவில் போற்றப்படும் ஒரு புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார்.
19-ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான ஆசிரியர்களில் ஒருவரான இவர், உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான நூல்களை எழுதிய எழுத்தாளர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டூமாஸ் 1802ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி பிரான்ஸின் பிகார்டி பகுதியில் உள்ள வில்லர்ஸ் காட்டரட்ஸ் கிராமத்தில் பிறந்தார்.
இவர் தனது 20 வயதில் பத்திரிகைகளுக்கு கதை எழுத தொடங்கினார்.
இயல்பாகவே இவருக்கு எழுத்தாற்றல் இருந்ததால், விரைவில் பிரபலமானார்.
'தி கவுன்ட் ஆஃப் மான்ட் கிறிஸ்டோ', 'தி த்ரீ மஸ்கிடேர்ஸ்', 'ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர்' ஆகிய புதினங்கள் ஆரம்பத்தில் தொடர்கதையாக வெளிவந்து பிறகு நாவல்களாக புகழ் பெற்றன.
சாகசங்கள் நிரம்பிய வரலாற்று நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.
இவரது தந்தை தாமஸ்-அலெக்ஸாண்ட்ரே டூமாஸ், நெப்போலியனின் இராணுவத்தில் ஒரு தற்காப்புப் படைத் தளபதியாக (General) இருந்தவர்.
டூமாஸின் 4 வயதில் அவரது தந்தை மறைந்ததால், முறையான பள்ளிப் படிப்பைப் பெற முடியாமல் வறுமையில் வளர்ந்தார்.
எனினும், அவரது தாயார் அவருக்கு வாசிப்புப் பழக்கத்தை ஊட்டினார்.
இவரது கதைகள் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
தி த்ரீ மஸ்கடியர்ஸ் (The Three Musketeers): தார்த்தானியன் மற்றும் மூன்று அரச பாதுகாவலர்களின் வீர தீரச் செயல்களைப் பற்றிய கதை.
தி கவுண்ட் ஆஃப் மான்டே கிறிஸ்டோ (The Count of Monte Cristo): தன் மீது பொய்க் குற்றம் சுமத்தியவர்களை ஒரு மனிதன் எப்படித் திட்டமிட்டு பழிவாங்குகிறான் என்ற விறுவிறுப்பான கதை.
ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர் (Twenty Years After): மஸ்கடியர்ஸ் கதையின் தொடர்ச்சி. சிறப்பம்சங்கள் இவரது படைப்புகள் உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
டூமாஸின் தாத்தா பிரெஞ்சு பிரபு, பாட்டி ஆப்பிரிக்க அடிமைப் பெண் ஆவார்.
கதைகளை விறுவிறுப்பாகவும், திருப்பங்களுடனும் நகர்த்துவதில் இவர் வல்லவர்.
எழுத்துலகின் சிகரம் என்று போற்றப்பட்ட அலெக்ஸாண்டர் டூமாஸ் 1870ஆம் ஆண்டு மறைந்தார்.
Hindusthan Samachar / Durai.J