நீட் போராட்டம் முதல் மேகதாது வரை... தமிழக அரசு மக்களை வஞ்சிக்கிறதா? – அப்பாவு கடும் தாக்கு
சென்னை, 24 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வு, டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டம் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து திமுக மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து சமூக வலைதளமான எக்ஸில் பதிவு வெளியிட்டுள்ளார்
அப்பாவு


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வு, டெல்லியில் நடைபெறும் மாணவர் போராட்டம் மற்றும் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து திமுக மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான அப்பாவு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரித்து சமூக வலைதளமான எக்ஸில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

மத்திய அரசின் மருத்துவ நிறுவனங்களில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுவதை எந்த மாநில அரசும் எதிர்ப்பதில்லை என்றும், ஆனால் மாநில அரசுகளின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் கட்டாயமாக்கப்படுவதையே திமுக கடந்த 10 ஆண்டுகளாக எதிர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை நீட் விலக்கு கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும், தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா இரண்டு முறை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஒன்றிய அரசு அடக்குவதாக குற்றம்சாட்டியுள்ள அப்பாவு, அதற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராட முயன்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும், மெரினாவில் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

அத்துடன், டெல்லியில் மாணவர்கள் பல நாட்களாக உணவு, உறக்கமின்றி ஜனநாயக வழியில் போராடி வரும் நிலையில், தமிழக அரசு அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரங்களிலும் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளிடமும் தமிழக அரசு சமநிலை அரசியல் மேற்கொள்வதாகவும் அப்பாவு தனது எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P