Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம் , 24 ஜூலை (ஹி.ச)
ஓசூரில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை கார் ஒன்றில் 5 பேர் பயணித்துள்ளனர்.
இந்த கார் காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் காரை இயக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி, எதிர் திசையில் வந்து கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.
இந்த பயங்கர மோதலில் கார் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்தவர்களில் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த 3 பேர் அருகில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b