100 கோடி தனியார் பள்ளி மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது -61 வங்கி கணக்குகள் முடக்கம்
சென்னை ,24 ஜூலை (ஹி.ச) பதிவு செய்யப்படாத தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் செயல்பட்டு, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹100 கோடி மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவா
Arrest


சென்னை ,24 ஜூலை (ஹி.ச)

பதிவு செய்யப்படாத தமிழ்நாடு பிரைவேட் ஸ்கூல்ஸ் அசோசியேஷன் என்ற பெயரில் செயல்பட்டு, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் ₹100 கோடி மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இவ்வழக்கில் உடந்தையாக இருந்து பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேலும் 2 பேரை பெருநகர சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக இதுவரை 61 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மோசடியில் தொடர்புடைய பிற நபர்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்து தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் பெருநகர சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ