Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 24 ஜூலை (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தேங்காய் 58 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 35 முதல் 40 ரூபாய் வரை விற்கப்பட்ட தேங்காய், தற்போது விலை உயர்ந்து காணப்படுவதால் இல்லத்தரசிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில்,
இந்த ஆண்டு தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது என்றும், பருவநிலை மாற்றம் மற்றும் போதிய மழையின்மை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விளைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு வரும் தேங்காயின் வரத்து குறைந்து, தட்டுப்பாடு நிலவுவதால் விலை தானாக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் தேங்காயின் வரத்தும் குறைந்துள்ளதால் இந்த விலை ஏற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு இதே நிலையில் நீடித்தால், வரும் பண்டிகை காலங்களில் தேங்காய் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b