நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி, 24 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி, 24 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும் புதுடெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் தூத்துக்குடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வஉசி கல்லூரி நுழைவாயில் முன்பாக இன்று காலை 10:15 மணி முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு, நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் தீவிர கோஷங்களை எழுப்பின.

இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அமைதியான முறையில், உரிய அனுமதி பெற்று பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்தப்படும் போராட்டங்களுக்குத் தடை விதிக்கப்படாது என்று போராடிய மாணவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் கூறினார்.

மேலும் விதிகளை மீறி சாலை மறியல் அல்லது பொது சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க முயன்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b