நீட் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
புதுடெல்லி, 24 ஜூலை (ஹி.ச.) நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நேரடியாக பேச வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்
நீட் விவகாரம் குறித்து  பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்


புதுடெல்லி, 24 ஜூலை (ஹி.ச.)

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நேரடியாக பேச வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான கார்கே கூறுகையில்,

பிரதமர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், அப்போதுதான் அவரது உண்மையான வார்த்தைகளை நாங்கள் புரிந்து கொள்ள முடியும்.

அவர் வரும்போது ஒரு அறிக்கையை அளிக்கட்டும். நள்ளிரவு 12 மணிக்கு பேசுவதற்கு பதிலாக, பகலில் நாடாளுமன்றத்திற்கு வந்து அவர் சொல்ல விரும்புவதைச் சொன்னால், அதை நாங்கள் பார்ப்போம்.

அப்போதுதான் எதிர்க்கட்சிகள் அதுகுறித்து விவாதிக்கவும், கேள்வி எழுப்பவும் முடியும்.

என்று கார்கே தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற கட்டமைப்புக்குள் அளிக்கப்படும் உறுதிமொழிகள் மட்டுமே நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும், பொறுப்புணர்வு மிக்கதாகவும் இருக்கும் என்றும், அப்போதுதான் எதிர்க்கட்சிகள் அதனை ஆய்வு செய்ய முடியும் என்றும் காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / vidya.b