Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர் 24 ஜூலை (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில், பள்ளி அறை ஒன்றில் இருந்த பீரோ, பெஞ்சுகள், ஆர்ஓ குடிநீர் சுத்திகரிப்பு கருவி, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அருகிலுள்ள அறைகளில் மாணவர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
இந்த தீ விபத்து தொடர்பாக திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியின் முன்பக்க நுழைவு வாயில் 24 மணி நேரமும் திறந்தே இருப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்வதாக கூறப்படுகிறது.
அவர்கள் யாரேனும் தீ வைத்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, இரவு நேரங்களில் பள்ளி வளாகத்தில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அரசு பள்ளிக்கு நிரந்தர இரவுக் காவலரை நியமிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam