தூத்துக்குடி இளைஞர் உயிரிழப்பு - தமிழக அரசை விமர்சித்து திண்டுக்கல் லியோனி எக்ஸ் பதிவு
சென்னை, 24 ஜூலை (ஹி.ச.) தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி தமிழக அரசை கடுமையாக விமர்சித்து எக்ஸ் சமூக வலைத
லியோனி


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)

தூத்துக்குடியில் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் லியோனி தமிழக அரசை கடுமையாக விமர்சித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

வெறும் வாய்சவடால் மற்றும் ரீல்ஸ்கள் மூலம் ஆட்சி நடத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ள அவர், விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் மக்கள் வேதனையில் உள்ளதாகவும், ஆனால் அமைச்சர்கள் வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.

அத்துடன், தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடியுள்ள திண்டுக்கல் லியோனி, மக்கள் இதற்கு தக்க பதிலை வழங்குவார்கள் என்றும் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P