Enter your Email Address to subscribe to our newsletters

திருவாரூர், 24 ஜூலை (ஹி.ச.)
டெல்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்து இரண்டாவது நாளாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று இரண்டாவது நாளாக கல்லூரி வளாகத்தின் முன்பு திரண்ட மாணவர்கள், தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் ஜனநாயக போராட்ட உரிமையை பறிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறவில்லை.
மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் தடுக்க கல்லூரி வளாகத்தின் முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b