கார் மீது லாரி மோதி மதுராந்தகம் அருகே கோர விபத்து - தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி
செங்கல்பட்டு , 24 ஜூலை (ஹி.ச.) பாண்டிச்சேரியில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் நோக்கி சென்ற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் மதுராந்தகம் அருகே உள்ள ஜானகிபுரம் என்ற பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விமா
கார் மீது லாரி மோதி மதுராந்தகம் அருகே கோர விபத்து -  தந்தை, மகன் உட்பட 3 பேர் பலி


செங்கல்பட்டு , 24 ஜூலை (ஹி.ச.)

பாண்டிச்சேரியில் இருந்து நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையம் நோக்கி சென்ற கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அந்த கார் மதுராந்தகம் அருகே உள்ள ஜானகிபுரம் என்ற பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் நோக்கி சென்ற போது கார் மீது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காரில் பயணித்த மூவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மதுராந்தகம் போலீசாரின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் காரில் பயணம் செய்தது பாண்டிச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்த கோபு(46) அவரது மகன் தினேஷ்( 15), இளஞ்செழியன்(54) உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத லாரியை சிசிடிவி கேமரா மூலமாக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சாலை விபத்தில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b