சமயபுரம், வடபழனி கோயில்களில் 2 பேர் பணியிடை நீக்கம் – இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை
தமிழ்நாடு, 24 ஜூலை (ஹி.ச.) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில், சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் வடபழனி ஆண்டவர் கோயிலில் பணியாற்றிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ம
ரமேஷ்


தமிழ்நாடு, 24 ஜூலை (ஹி.ச.)

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவின் பேரில், சமயபுரம் மாரியம்மன் கோயில் மற்றும் வடபழனி ஆண்டவர் கோயிலில் பணியாற்றிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் மணியம் பதவி வகித்தவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து, பொது நலன் மற்றும் நிர்வாக நலன் கருதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் அண்மையில் அமைச்சர் மேற்கொண்ட ஆய்வின் போது சில நிர்வாக ஒழுங்கின்மைகள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில், அங்கு இளநிலை உதவியாளராக பணியாற்றிய ஹரி கோவிந்த் என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்கை உறுதி செய்யும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த பணியிடை நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P