ஆம்பூர் அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவன் தலைமறைவு - போலீசார் வலைவீச்சு
திருப்பத்தூர், 24 ஜூலை (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையத்தைச் சேர்ந்த பாபு மற்றும் இவரது மனைவி ஸ்ரீதேவி இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையி
ஆம்பூர் அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவன் தலைமறைவு - போலீசார் வலைவீச்சு


திருப்பத்தூர், 24 ஜூலை (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜபாளையத்தைச் சேர்ந்த பாபு மற்றும் இவரது மனைவி ஸ்ரீதேவி இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

ஆத்திரமடைந்த பாபு, மனைவி ஸ்ரீதேவியை கடுமையாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாபு, உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய போலீசார், உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவர் பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இக்கொலை சம்பவம் உடையராஜபாளையம் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b