Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 24 ஜூலை (ஹி.ச.)
தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் வழங்கிய நீரின் அளவு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு மத்திய அரசு அளித்த பதிலில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவு மற்றும் வழங்கப்பட்ட நீரின் அளவு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
காவிரி நீர் பங்கீட்டு அட்டவணையின்படி, கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. நீரும் வழங்க வேண்டும்.
ஆனால், இந்த காலகட்டத்தில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 2.915 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 0.459 டி.எம்.சி. நீரும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மொத்தம் 40.43 டி.எம்.சி. நீரில், 3.374 டி.எம்.சி. நீர் மட்டுமே கிடைத்துள்ளது.
இதனால், நிர்ணயிக்கப்பட்ட அளவுடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு நீர் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான இந்த விவகாரம் தமிழக–கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான முக்கிய பிரச்சினையாக இருந்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் வெளியான இந்த தகவல் கவனம் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA