Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஆழியார் பகுதியில் 2024-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கீழ்பாககம் அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஜாகீர் (27), அதே காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த அரவிந்த்சாமி என்பவரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 20-ஆம் தேதி தாக்குதலுக்கு உள்ளான ஜாகீர், சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam