டெல்லி மாணவர்கள் மீது தடியடி - கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்
செங்கல்பட்டு, 24 ஜூலை (ஹி.ச.) டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட
Lawyers stage road blockade


செங்கல்பட்டு, 24 ஜூலை (ஹி.ச.)

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், டெல்லி போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாணவர்கள் மீதான தாக்குதல் ஜனநாயக விரோதமானது என்றும், கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

வழக்கறிஞர்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், செங்கல்பட்டு - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாயினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b