முதலில் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கசியட்டும் – பிரதமரை விமர்சித்த சு.வெங்கடேசன்
மதுரை, 24 ஜூலை (ஹி.ச.) நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில்
Su Venkatesan


மதுரை, 24 ஜூலை (ஹி.ச.)

நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் அறிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (X) தளப் பதிவில்,

அப்படியொரு மசோதா வரும் முன்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்யட்டும் என்று கிண்டலாக விமர்சித்துள்ளார்.

மேலும், பொறுப்பேற்பில் இருந்து தப்பிக்கவும், அமைச்சரைக் காப்பாற்றவும் இரவெல்லாம் பணியாற்றும் பிரதமரே, இன்னும் எத்தனை நாள் குறுக்குவழியை மட்டுமே தேர்வு செய்வீர்கள்? நேர்வழி ஒன்றிருக்கிறது. அந்த வழியில் நடக்கச் சொல்கிறார்கள் மாணவர்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் மத்திய கல்வி அமைச்சரின் பொறுப்பேற்பு குறித்து அரசியல் கட்சிகளிடையே விமர்சனங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P