Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 24 ஜூலை (ஹி.ச.)
நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்துக்கு, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
WE THE PEOPLE OF INDIA... என்று தொடங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை மேற்கோள்காட்டி, அந்த அரசியலமைப்பு வழங்கிய உரிமை எந்த அரசையோ அல்லது காவல்துறையையோ விட உயர்ந்தது என தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நீதிக்காகப் போராடிய மாணவர்களையும், காங்கிரஸ் கட்சியினரையும் காவல்துறை கொடூரமாகத் தாக்கியிருப்பது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அமைதியான முறையில் போராடும் உரிமையைப் பறிக்க மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தங்களது குரல் நாடாளுமன்றத்திலும் வீதியிலும் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam