Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 24 ஜூலை (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 55). இவர் ராதாபுரத்தில் உள்ள மெஸ் ஒன்றில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது தம்பி ஆறுமுகம்
(வயது 50). கூலித்தொழிலாளி. இவர்கள் இருவரும் அடிக்கடி குடிபோதையில் இருப்பதால் குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடும்பத்தில் உள்ள சொத்து தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கம்.
அதன்படி இரவு சகோதரர்கள் இருவரும் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திக்குளம் சென்று விட்டு ஊருக்கு திரும்பும் போது காரியாகுளத்தில் சமூகரெங்கபுரம் செல்லும் ரோட்டில் வைத்து குடிப்போதையில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது செல்லத்துரை ஆறுமுகத்து தலை மீது கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார்.
இதில் தலையில் பலத்த இரத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி அருகில் குடி போதையில் இருந்த செல்லத்துரையை கைது செய்து ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN