நீட் வினாத்தாள் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது - கிருஷ்ணசாமி பேட்டி
நெல்லை, 24 ஜூலை (ஹி.ச.) புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உயிரை தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில் பல்வேறு அரசியல
PTK Krishnasamy


நெல்லை, 24 ஜூலை (ஹி.ச.)

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உயிரை தமிழகம் கட்சியின் முன்னெடுப்பில் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 8 மாத காலமாக மாஞ்சோலை மக்களுக்கு சட்டப்பூர்வ அடிப்படையில் வழங்க வேண்டிய ரேஷன் பொருட்கள் வழங்காதது கண்டிக்கத்தக்கது.

அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2006 வன உரிமை சட்டப்படி மாஞ்சலையில் மக்கள் வாழ்வதற்கு உரிமை உள்ளது. தேயிலை தோட்ட நிர்வாகம் ஒப்பந்த காலம் முடிவதற்குள் மூடியது கண்டனத்திற்குரியது என வழக்கு தொடரப்பட்ட வழக்கு நடந்து வருகிறது.

சிறையில் வாழ்வோருக்கு கூட மின்சாரம், குடிநீர், உணவு வசதிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் 8 மாத காலமாக மாஞ்சோலை மக்களுக்கு எதுவும் கிடைக்காமல் இருந்து வருகிறது.

நாள்தோறும் 5 முறை இயக்கப்பட்ட அரசு பஸ் தற்போது 1 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செயல்பாடுகளின் காரணமாக மறைமுகமாக மாஞ்சோலை மக்கள் வெளியேற்றப்படும் நிலை இருக்கிறது.

ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி போன்றவைகள் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சென்னையில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் கூட்டத்தை கூட்டி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கைது செய்யப்பட்டவர்களிடம் மனிதநேயத்துடன் நடக்க வேண்டும் என காவல்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் தூத்துக்குடி மாநகர பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

காவல் நிலைய மரணங்கள் ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஒவ்வொரு முறையும் வினாத்தாள் கசிவு ஏற்படுகிறது.

மறுதேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் மனச்சோர்வு அடைகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.

அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும். அரசின் நிர்வாகத்திற்குள் போக வேண்டும் என்பது இளைஞர்களின் கனவாக உள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்காக நடத்தப்படும் போராட்டத்திற்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கிறது.

நீட் வினாத்தாள் விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தானாக முன்வந்து ராஜினாமா செய்வது தவறு இல்லை.

ஜனநாயகம் படம் தொடர்பாக கேட்கிறீர்கள். எல்லா காலத்திற்கும் ரீல்சும், போலி கண்ணீரும் உதவாது.

போலி கண்ணீரும், ரீல்சும் கொஞ்ச நாள் தான் இருக்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் அமைச்சர்கள் அதில் கவனம் செலுத்தவேண்டும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். ஆனால் இதனை கவனிக்காமல் விட்டுவிட்டு அமைச்சர்கள் இன்னும் ரசிகர்கள் மன நிலையில் இருந்து வராமல் உள்ளனர்.

பூனைக்கும் நண்பன், பாலுக்கும் காவல் என்பதே நீட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடாக காட்டுகிறது. ஜனநாயகன் என படம் எடுத்தால் போதாது. வாழ்வே ஜனநாயகமாக இருக்கவேண்டும்.

விரும்பியோ, விரும்பாமலோ நடக்கும் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும்.

பாராளுமன்ற தேர்தலுக்கு 3 ஆண்டுகள் உள்ளது. அரசியல் நிலைப்பாடு தேர்தலுக்கு முன் 2 அல்லது 3 நாட்களில் கூட மாறும். 2029 தேர்தலில் என்ன நிலை வரும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.

கட்சி கூட்டணி மாறுவது அரசியல் கட்சிகள் இயல்பு. ஆனால் சில கட்சிகள் அதனையே வாடிக்கையாக வைத்துள்ளது.

சந்தர்ப்பத்திற்கும், பதவிக்கும், ஆதாயத்திற்காகவும் கட்சியில் இணைபவர்கள் யார்? என்பதை மனதில் வைத்து வரும் காலத்தில் த.வெ.க செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / ANANDHAN