பழனி மட நில முறைகேடு - சிபிஐ விசாரணை கோரி மதுரை அமர்வில் முறையீடு
திண்டுக்கல், 24 ஜூலை (ஹி.ச.) பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. மதுரை
உயர்நீதிமன்ற மதுரை கிளை


திண்டுக்கல், 24 ஜூலை (ஹி.ச.)

பழனி அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரிஸ்குமார், நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு இந்த முறையீட்டை முன்வைத்தார்.

அப்போது, மடத்திற்கு சொந்தமான நிலம் பொறுப்பு பதிவாளர் மூலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து உடனடியாக புகார் அளிக்காதது, நிலத்தின் மதிப்பை குறைவாக கணக்கிட்டு பதிவு செய்தது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, உரிய மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam