Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 24 ஜூலை (ஹி.ச.)
நீட் வினாத்தாள் கசிவு போன்ற தேர்வு முறைகேடுகளை தடுக்க மேலும் வலுவான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான முக்கிய முன்மொழிவுகள் இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காணொளி செய்தியில்,
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பிறகு கடந்த சில மாதங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
வழக்கில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதே அரசின் முதன்மை நோக்கமாக இருந்ததாகக் கூறிய அவர், மீண்டும் தேர்வு நடத்தும் பணிகள் குறுகிய காலத்திலேயே நிறைவேற்றப்பட்டதாகவும், அதன் முடிவுகளும் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்கும் திட்டமும் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதனுடன் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை உறுதி செய்யும் சட்டத் திருத்தங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
இந்த முன்மொழிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் அதற்கான மசோதாவை தாக்கல் செய்து விரைவாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P