Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 24 ஜூலை (ஹி.ச)
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்து பிரசாந்த் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும் அந்த படகில் இருந்த ஒன்பது மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மீனவர்களை வருகிற ஆறாம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று மதியம் ராமேஸ்வரத்தில் அனைத்து மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறைபிடிக்கப்பட்ட 9 மீனவர்களையும் படகையும் விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று தினங்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் கடற்கரையிலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN