Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 24 ஜூலை (ஹி.ச.)
கரூர் மாவட்டத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிற்கு சோதனைக்கு சென்ற பொழுது அவர்களை தடுத்து நிறுத்தி திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி தாக்கியதாக கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட 120 நபர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ஜாமீன் பெற்ற 120 நபர்களும் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தான்தோன்றி மலை காவல் நிலையங்களில் காலை, மாலை என இரண்டு வேலை கையெழுத்திட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அசோக்குமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஜாமீன் பெற்ற நிலையில் இன்று கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம் எல் ஏவை பேரம் பேசிய விவகாரத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாரை போலீசார் தேடி வரும் நிலையில் இன்று அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN