Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச..)
குதிரைப் பேர வழக்கில், முன்ஜாமீன் மனு தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற வந்தார்.
இந்த வழக்கில், கடந்த 8-ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், ரூ.25,000 மதிப்பிலான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
மேலும், 15 நாட்களுக்குள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் நடைமுறைகளை பூர்த்தி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தினமும் காலை 10.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam