நீட் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு ஏன்? – முதல்வர் விஜயை எஸ்.ஜி. சூர்யா தாக்கு
சென்னை, 24 ஜூலை (ஹி.ச.) நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா, அவரது நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள
Sg


Hh


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்ட கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா,

அவரது நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

முதல்வர் விஜய் இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும் வரவேற்கத்தக்கது.

ஆனால், அந்த அதிகார அடக்குமுறை திமுக ஆட்சியில் நிகழும்போது மட்டும் ஏன் மௌனம் காக்கப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வேங்கைவயல் சம்பவம், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள், பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் அவமதிக்கப்பட்ட விவகாரங்கள் உள்ளிட்ட பல சம்பவங்களில் விஜய் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், இன்று நீட் தேர்வை எதிர்த்து பேசுகிறீர்கள். ஆனால், அந்த நீட் தேர்வை நாட்டில் அறிமுகப்படுத்திய கூட்டணி திமுக–காங்கிரஸ் கூட்டணிதான் என்பது தெரியாதா? என்றும் தனது பதிவில் விமர்சித்துள்ளார்.

மேலும், உள்ளூரில் நடைபெறும் திமுக அரசின் அடக்குமுறைகள் குறித்து மௌனம் காத்துவிட்டு, சி.ஜே.பி. (CJP) போராட்டம் என்ற பெயரில் காவல்துறையினரை தாக்குபவர்களுக்கும், இந்தியாவை சீர்குலைக்க முயலும் வெளிநாட்டு சதிகளுக்கும் ஆதரவாக செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் எஸ்.ஜி. சூர்யா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துகள், நீட் தேர்வு மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான விவாதங்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ