Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பெரம்பூர் தொகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தின் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சிவா, இன்று காலை சென்னை சிஐடி நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் சிவாவை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமித்து அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டத்தில்,
எனக்காக பெரம்பூர் தொகுதியை விட்டுக் கொடுத்த சிவாவை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து சிவாவுக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவா,
முதலமைச்சர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி.
அவர் வழங்கியுள்ள இந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் செயல்பட்டு மக்களின் நலனுக்காக சிறப்பாக நிறைவேற்றுவேன் என்று உறுதியளித்தார்.
சிவாவின் நியமனம் மற்றும் பொறுப்பேற்பு, தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ