ஜனநாயகன் திரைப்படத்திற்காக அறிவிக்கப்படாத அரசு விடுமுறையை அமுல்படுத்தப்பட்டது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
சென்னை, 24 ஜூலை (ஹி.ச.) முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜனநாயகன் திரைப்படம் குறித்து வீடியோ வெளியிட்டு விமர்சித்துள்ளார். அந்த வீடியோ பதிவில் அவர் கூறியதாவது, முதல்வர் விஜய் அவர்கள் நடித்துள்ள ஜனநாயக படம் நேற்று வெளியானது இதனால தமிழகத்தில் நா
A


சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஜனநாயகன் திரைப்படம் குறித்து வீடியோ வெளியிட்டு விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் அவர் கூறியதாவது,

முதல்வர் விஜய் அவர்கள் நடித்துள்ள ஜனநாயக படம் நேற்று வெளியானது இதனால தமிழகத்தில் நாம் நினைத்தது போல அறிவிக்கப்படாத அரசு விடுமுறையில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகமே திருவிழா கோலமாக இருக்கணும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவால் விஜய் ரசிகர்கள் தமிழகத்தை அலங்கோல படுத்தி விட்டார்கள்.

வார நாட்களில் தவறாமல் கோட்டைக்கு வரும் முதலமைச்சர் விஜய் நேற்று கோட்டைக்கு வரவில்லை மன்னன் எவ்வழியோ மக்களும் அப்படியே என்று அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் மக்கள் பணியை தள்ளி வைத்துவிட்டு முதல்வர் ஜோசப் விஜய் நடித்து வெளிவந்த ஜனநாயக படம் ரிலீஸ்க்கு ரீல்ஸ் போட தியேட்டருக்கு போய் விட்டார்கள்.

அதுதான் த.வெ.க அரசின் தலையாய பணியாக நேற்று தமிழகம் கண்டு களித்தது.

ஜனநாயகன் பட ரிலீசுக்கு ரீல்ஸ் போட தியேட்டருக்கு போய்விட்டார்கள் நம்முடைய ஜனநாயக காவலர்கள்.

அதோடு மட்டுமா அங்கே தியேட்டரில் குற்றால அருவியிலே தண்ணீர் கொட்டியது என்னவென்று திரும்பிப் பார்த்தால் தமிழக அமைச்சர்களின் கண்களிலே கண்ணீர் கொட்டிய அந்த காட்சி நம் நெஞ்சத்தை துடிதுடிக்க வைத்து விட்டது.

இந்த ஆண்டு காவிரியில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியவில்லை அதனால் வந்த கண்ணீரோ, கர்நாடகா தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கிறது அதனால் வந்த கண்ணீரோ, சாமானிய மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் போராடிக் கொண்டிருக்கிறார்களே மாணவர்கள் அதனால் வந்த கண்ணீரோ ,கர்நாடகா மேகதாது அணை கட்டுவதை எப்படி தடுப்பது என்பதினாலே வந்து கண்ணீரா, அரசு மருத்துவமனையில் நோயாளியின் ஒரு விரலையே எலி கடித்துக் கொண்டு போனது அதனால் வந்த கண்ணீரா, அருணாச்சலம் என்கிற ஒரு இளைஞன் லாக்கப்டெத் மரணம் நேற்றைய தினம் தமிழகத்தை உலுக்கியதே அதோடு தினந்தோறும் தினந்தோறும் அரங்கேற்று வரும் லாக்கப் மரணங்களை தடுக்க முடியவில்லை அதனால் அந்த கண்ணீரா, பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய முடியவில்லை என்கிற ஏக்கத்தில் வந்த கண்ணீரா, போதை நடமாட்டத்தை தடுக்க முடியவில்லை என்கிற கடமை உணர்வால் நான் வந்த கண்ணீரா, இத்தனையும் பார்த்துவிட்டு கண்ணீர் வராத அமைச்சர்களுக்கு ஜனநாயகம் பார்க்கிறபோது வந்த கண்ணீர் இருக்கிறதே அது குற்றால அருவியே அதில் போட்டி போட முடியவில்லை.

பஞ்ச் டயலாக் வசனங்களில் நம்ம பாதுகாப்பின் தளபதி இல்லை சார், தளபதி பாதுகாப்பதெல்லாம் நாம். இருக்கிறோம் மத்தவங்க பேசினா ஸ்பீச், தளபதி பேசினா ரீச் என இந்த ஜென்சி தலைமுறையை இந்த பன்ஞ் டயலாக்கால் பஞ்சராக்கி அடிமையாகி உள்ளார்களே.

இந்த அடிமை விலங்கு ஒழிப்பது எப்போது என வேதனையில் தமிழக மக்கள் விடை தெரியாமல் விழி விழி பிதிங்கி நிற்கிறார்கள்.

சினிமா கதாநாயகனான விஜய்யை உண்மை கதாநாயகனாக நினைத்து இன்னும் எத்தனை நாளுக்கு தான் இந்த ஜென்சி தலைமுறை விழுந்து கிடக்குமோ என்பது நமக்கு புரியவில்லை.

குருட்டு அதிர்ஷ்டத்தால் வரும் அரசியல் வெற்றிகளால் இப்படித்தான் பல அரசியல் ஆச்சரியங்கள் அரங்கேறும் அதுதான் நேற்று அரங்கேற்றமாய் இருக்கிறது.

ஜனநாயகம் திரைப்படத்திற்காக முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை ஆளும்கட்சிக்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கு அறிவிக்கப்படாத அரசு விடுமுறையை அமல்படுத்திய வரலாறு இந்த தமிழகம் பார்த்ததுண்டா இன்னும் அரசியல் ஆச்சரியம் காத்திருக்கிறது.

நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் காலம் நல்ல தீர்ப்பு வழங்கும் அப்போது ஜென்சி தலைமுறைக்கு வசீகரம் எது? வாழ்க்கை எது? கவர்ச்சி எது? கவனம் எது ?என்பது புரியும் அப்போது முதல்வர் விஜய்யின் மாயபிம்பம் சுக்கு நூறாக உடைந்து போகும் பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA