தீர்த்தக்காடு பகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அமைச்சர் வன்னியரசு
மதுரை, 24 ஜூலை (ஹி.ச.) மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் வசிக்கும் மக்களை சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதி குறைகளை கேட்டறிந்தார். தீர்த்தக்காட
Vanniarasu


மதுரை, 24 ஜூலை (ஹி.ச.)

மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் வசிக்கும் மக்களை சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதி குறைகளை கேட்டறிந்தார்.

தீர்த்தக்காடு பகுதியில் பட்டியலின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வரும் நிலையில், சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர் வன்னியரசு, பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, வீட்டுமனை பட்டா கோரி விண்ணப்பித்துள்ள மக்களுக்கு 30 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும், மாவட்ட வருவாய் அலுவலர், மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை, மாநகராட்சி, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தீர்த்தக்காடு மக்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் வன்னியரசு உறுதியளித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN