மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டன போராட்டம்
திருநெல்வேலி, 24 ஜூலை (ஹி.ச) திருநெல்வேலியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் கல்வி உரிமைகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்த கரு
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் கண்டன போராட்டம்


திருநெல்வேலி, 24 ஜூலை (ஹி.ச)

திருநெல்வேலியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் கல்வி உரிமைகள் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் தெரிவித்த கருத்துகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி வளாகத்தின் முன்பு திரண்ட மாணவர்கள், மத்திய அரசின் கல்விக் கொள்கைகளை கண்டித்தும், அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மாநிலங்களின் கல்வி உரிமையில் ஒன்றிய அரசு தலையிடக் கூடாது என்றும், தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிரான எந்தவொரு முடிவையும் ஏற்க முடியாது என்றும் வலியுறுத்தினர்.

கையில் பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b