ஜனநாயகன் திரைப்படம் வெளியீட்டு விழாவில் தவெக நிர்வாகிகள் மோதல் - மாணவரணி அமைப்பாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர், 24 ஜூலை (ஹி.ச.) திருவாரூரில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, தவெக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் வன்முறையாக மாறியது. தைலம்மை திரையரங்கில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், வடக்கு மாவட்ட செயலாளர்
மோதல்


திருவாரூர், 24 ஜூலை (ஹி.ச.)

திருவாரூரில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, தவெக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் வன்முறையாக மாறியது.

தைலம்மை திரையரங்கில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், வடக்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையிலான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முதல் காட்சி முடிந்தபின், மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்த் தலைமையிலான மற்றொரு தரப்பினர் திரையரங்கு வளாகத்தில் விதைப் பந்துகளை வழங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது, மதன் தரப்பினரின் கார் வேகமாக வந்ததில் இருவரின் காலில் சக்கரம் ஏறியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில், மாவட்ட செயலாளர் மதனின் தம்பி மனோஜ் மற்றும் அவரது நண்பர் தமிழ் ஆகியோர், ஆனந்த் தரப்பைச் சேர்ந்த மாணவரணி அமைப்பாளர் பசுபதியை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காயமடைந்த பசுபதி, ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால்,இதுவரை எந்தத் தரப்பும் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / GOKILA arumugam