Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 24 ஜூலை (ஹி.ச.)
தூத்துக்குடி அமுதா நகரில் காவல் விசாரணைக்குப் பிறகு உயிரிழந்ததாகக் கூறப்படும் இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது அருணாச்சலத்தின் தாய் பரமேஸ்வரி, தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக காவல்துறையினர் கூறி, எங்களை ஏமாற்றி கையெழுத்து வாங்கிவிட்டனர்.
எனது மகனை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்துள்ளனர் என்று கண்ணீர் மல்க குற்றம்சாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,
இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காவல்துறையின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
மேலும், சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், காவல் துறையின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை அனுபவித்து வருகிறார்கள் என்றும் அவர் அரசை விமர்சித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam