Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 24 ஜூலை (ஹி.ச.)
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நரேஷ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் கிருஷ்ணா ஆகிய இருவரையும், திருவல்லிக்கேணி போலீசார் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் விசாரணையில்,
இந்த பேரம் பேச்சு வழக்கின் முக்கிய மூளையாக நரேஷ் செயல்பட்டதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நரேஷ் மூலமாகவே பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முயற்சி செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, நரேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் கார் ஓட்டுநர் கிருஷ்ணா ஆகியோரிடம், திருவல்லிக்கேணி போலீசார் போலீஸ் காவலில் வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam