Enter your Email Address to subscribe to our newsletters

மேற்கு வங்கம், 24 ஜூலை (ஹி.ச)
புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையை போலவே பழமையும் பெருமையும் வாய்ந்ததாக கருதப்படும் குப்திபாரா ரத யாத்திரை, மேற்கு வங்க மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக பக்தர்களை ஈர்த்து வருகிறது.
ரத யாத்திரை முடிந்து இறைவன் மீண்டும் கருவறை திரும்பும் நிகழ்வான உல்டா ரத யாத்திரை இங்கு மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஹூக்ளி மாவட்டம் குப்திபாராவில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் உல்டா ரத யாத்திரை திருவிழாவில் அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி முதன்முறையாக கலந்து கொண்டுள்ளது, பெருமைக்குரிய விஷயம் என்று மேற்கு வங்க சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் சுமனா சர்க்கார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
உல்டா ரத யாத்திரை போன்ற தனித்துவமான திருவிழா இந்தியாவில் வேறு எங்கும் கொண்டாடப்படுவதில்லை. ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பலகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குப்திபாராவில் மட்டுமே இந்த விழா கொண்டாடப்படுகிறது.
வங்காளத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஒரு முதலமைச்சர் இந்த தனித்துவமான பாரம்பரியத்தை நேரில் காண வருகிறார். மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி மற்றும் நிதியமைச்சர் டாக்டர் ஸ்வபன் தாஸ் குப்தா ஆகியோர் இந்த பிரம்மாண்டமான நிகழ்வில் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
இந்த திருவிழா மாநிலத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் தனி இடம் பிடித்துள்ளது. குப்திபாராவில் மட்டுமே பிரத்தியேகமாக கொண்டாடப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆண்டு விழாவில் முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b