ஜிம்பாப்வேக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
ஹராரே , 24 ஜூலை (ஹி.ச.) ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் நிருபர்களிடம் கூறியதாவது:-
A


ஹராரே , 24 ஜூலை (ஹி.ச.)

ஜிம்பாப்வேக்கு எதிராக ஹராரேவில் நேற்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நமது வீரர்கள் போட்டிக்கான திட்டமிடலை களத்தில் கச்சிதமாக செயல்படுத்தினர்.

கேப்டனாக எனது முதல் வெற்றியை பெற்றதில் இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

மயங்க் யாதவ் சரியான லென்த்தில் தொடர்ந்து சிறப்பாக பந்துவீசினார். சூர்யவன்ஷி அச்சமற்ற இளம் வீரராக மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார்.

அவரது ஆட்டம் மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

இதற்கு முன்பு இதே மைதானத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்திருந்தார். இதனால் இந்த ஆடுகளத்தின் தன்மை குறித்து அவருக்கு நல்ல புரிதல் இருந்தது. அதுவே களத்தில் அவர் தன்னம்பிக்கையுடன் விளையாட உதவியது.

இதே மைதானத்தில் நடைபெற உள்ள மேலும் 2 போட்டிகளிலும் இந்த வெற்றி அணிக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் என்று ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA