Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 25 ஜூலை (ஹி.ச.)
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை அடுத்து, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனத் தலைவர் அபிஜித் திப்கே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், தர்மேந்திர பிரதான் பயப்படத் தேவையில்லை என்றும் இதுதான் ஜனநாயகம் என்றும் கூறினார் .
அதோடு அமைச்சர் ராஜினாமா செய்துவிட்டார், ஆனால் தங்களது போராட்டம் இத்துடன் முடிந்துவிடவில்லை என்றார். மேலும், எங்களுக்கு இன்னும் இரண்டு முக்கிய கோரிக்கைகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.
தனது முதல் கோரிக்கையாக, “தேர்வு முறைகேடு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அந்தத் தொகை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார்.
இரண்டாவது கோரிக்கையாக, கடந்த 20-ஆம் தேதி போராட்டத்தின் போது அத்துமீறி செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இறுதியாக, நினைவில் கொள்ளுங்கள். கரப்பான்பூச்சிகளுடன் விளையாடாதீர்கள் என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P