Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 25 ஜூலை (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தின் குண்டக்கல் முதல் கர்நாடக மாநிலம் பல்லாரி வரையிலான ரயில் வழித்தடத்தில் 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டம் ராயலசீமா பகுதியின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றமாக அமையும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில் ஒரு கூறுயது :
இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு சந்திரபாபு நாயுடு நன்றி தெரிவித்தார்.
ரூ.1,264 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த ரயில் பாதை விரிவாக்கத் திட்டத்தில், சுமார் ரூ.600 கோடி ஆந்திரப் பிரதேச எல்லைக்குள் செலவிடப்பட உள்ளது. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுவதன் மூலம் ராயலசீமா, வட கர்நாடகா மற்றும் கோவா பகுதிகளுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து இணைப்பு மேலும் வலுப்பெறும்.
இதன் மூலம் பயணிகளின் பயண நேரம் குறைவதுடன், சரக்கு ரயில் போக்குவரத்து வேகமாக நடைபெறும். தற்போது உள்ள ரயில் வழித்தடங்களில் ஏற்படும் நெரிசலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்டம் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும். ராமாயபட்டினம் துறைமுகங்களுக்கு மேம்பட்ட ரயில் இணைப்பு கிடைப்பதன் மூலம் புதிய பொருளாதார வாய்ப்புகள் உருவாகும்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு தொடர்ந்து அளித்து வரும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சந்திரபாபு நாயுடு கூறினார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA