Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 25 ஜூலை (ஹி.ச.)
பாஜக ஆட்சியில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற நம்பிக்கையை பாஜக தலைமையிலான மத்திய அரசிடம் வைத்திருக்க முடியாது. பாஜக ஆட்சியில் நீட் தேர்வு ஒருபோதும் ரத்து செய்யப்படாது என்றார்.
மேலும், நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது; ஏழை, கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பாதிக்கிறது.
மாநிலங்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், தொல். திருமாவளவனின் இந்தக் கருத்து தமிழக அரசியலில் மீண்டும் நீட் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam