Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 25 ஜூலை (ஹி.ச.)
காவல் நிலையம் மரணங்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் எப்போது வாயை திறப்பார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதை தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது;
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam